Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, June 12, 2018

காதல் விவகாரம் ; கைகலப்பில் மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் !!!

Currently online
இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் மூவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காதல் பிரச்சினையால் திருகோணமலை - பாலையூற்று பகுதியில் நேற்று இரண்டு குழுக்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள  மூவரும் உவர்மலை, பாலையூற்று பகுதியை சேர்ந்த 22, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. 

சந்தேகத்தின் பேரில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.