Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, June 11, 2018

உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் கவனம் செலுத்த வேண்டியவை!

Currently online
உடற்பயிற்சி என்று வந்துவிட்டாலே அதை செய்வதற்கு முன்னும் செய்யும்போதும் பிறகும் என்ன சாப்பிடவேண்டும் என்பது முக்கியமானது. 

உடற்பயிற்சி மூலம் கட்டுமஸ்தான உடலமைப்பு பெற ஊட்டச்சத்துக்களும் ஒரு பங்காற்றுகின்றன. 

உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான சக்தியை நாம் உணவிலிருந்து  தான் பெறுகிறோம். 

நமது உடலின் எரிபொருள் உணவுகள்.நாம் உண்ணும் கார்போஹைடிரேட்டுகளிலிருந்து பெறப்படும் கிளைக்கோஜன் தான் நாம் உடற்பயிற்சி செய்யத் தேவையான ஆற்றலைத் தருகிறது. 

நீங்கள் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் உடற்பயிற்சி செய்வதற்கும் பல சாதனைகள் செய்வதற்கும் உறுதுணையாக இருக்கும்.

உடற்பயிற்சிக்கு முன் செய்ய வேண்டியவையும், செய்ய கூடாதவையும்  

உடற்பயிற்சிக்கு முன் உண்ணுதல் மிகவும் முக்கியமானது. 

உடற்பயிற்சிக்கு முன் உண்ணும் உணவானது அவரவர் செய்யும் விளையாட்டு பயிற்சியினைப் பொறுத்து மாறுகிறது. 

பொதுவாக உடற்பயிசிக்கு முன் உண்ணும் உணவில் குறைந்த அளவிலான கொழுப்பும், கிளைக்கோஜென்னாக மாறக்கூடிய கார்போஹைட்ரேட், நார்ச்சத்து குறைந்ததாக இருப்பின் சிறந்தது. 

அதே போன்று உடற்பயிற்சியின் போதும் நீராகாரங்களும் தாராளமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதே போன்று உடற்பயிற்சியின் போது தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளிலும் கவனம் தேவை. அதிக அளவிலான கொழுப்புச்சத்து, நார்ச்சத்து,  எண்ணெய்ப் பலகாரங்கள், குளிர்மென்பானங்கள் போன்றவற்றை உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட்டால் வயிற்றில் பிடிப்பு, மற்றும் சில உபாதைகள் ஏற்பட வழிவகுக்கும்.

நீங்கள் உண்ணும் உணவு ஜீரணமாகி உடலில் உறிஞ்சப்பட்டு உடற்பயிற்சியின் போது தேவைப்படும் ஆற்றலாக மாறுகிறது. 

அதிக அளவிலான உடற்பயிற்சிக்கு அதிக அளவிலான ஆற்றல் தேவைப்படுவதால் அதற்குத் தேவையான விகிதத்தில் உங்கள் உணவும் இருக்கவேண்டும். 

அதிக அளவிலான நார்ச்சத்து, புரதம், கொழுப்பு போன்றவை உடலில் ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் உடற்பயிற்சி செய்யத் தேவையான ஆற்றல் இல்லாமல் உடற்பயிற்சி செய்வதால் தான் வயிற்று உபாதைகள் ஏற்படுகின்றன. 

அளவுக்கு அதிகமாக உண்டாலும் அதுவும் ஜீரணமாக தாமதத்தை ஏற்படுத்தலாம். 

உடற்பயிற்சிகு முன் 3 – 4 மணி நேரத்திற்கு முன்னரே உணவு உண்பது நல்ல பலன் கிடைக்கும். 

அல்லது சிறிய அளவிலான சிறு நொறுக்குத்தீனிகள் ஒரு 3 மணி நேரத்திற்கு முன்னும் எடுத்துக்கொள்ளலாம்.

உடற்பயிற்சிக்குப் பின் செய்ய வேண்டியவையும், செய்ய கூடாதவையும்  

உடற்பயிற்சிக்குப் பின் உடலிலிருந்து வெளியேறிய வியர்வைக்காக வெறும் நீராக மட்டும் பருகினால் போதாது. 

திரவ ஆகாரத்துடன்,திட ஆகாரமும் எடுத்துக்கொள்ளவேண்டும். உடற்பயிற்சிக்குப் பின் அரை மணி நேரத்திற்குள் கார்போ ஹைட்ரேட் சத்துள்ள ஆகாரம் எடுத்துக்கொள்வது அவசியம். 

உடற்பயிற்சிக்குப் பின் புரதச்சத்து எடுத்துக் கொள்வதினால் அவை உடலின் தசை மற்றும் திசுக்களை பலப்படுத்துவதுடன் சரி செய்யவும் உதவுகிறது.

உடற்பயிற்சிக்குப் பின் உணவின் அளவு ஆளைப் பொறுத்து மாறுவதில்லை. 

ஆனால் அவர்கள் செய்யும் உடற்பயிற்சியைப் பொறுத்தே வேறு படுகிறது. ஆதலால் உடற்பயிற்சிக்குப் பின் கார்போ ஹைட்ரேட் சத்துள்ள புரதச்சத்துள்ள ஆகாரம் எடுத்துக்கொள்வது அவசியம்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.