Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

ஆண்_வலி.........!

Currently online
பல்லியைக் கண்டாலே
பறந்தடிச்சு ஓடிடுவாள்
கரப்பானைக் கண்டால்
கட்டிப்பிடிச்சுக் கதறுவாள்

பட்டுக்குட்டியப்பா - அவளுக்கு
பஞ்சுமாரி உடம்பப்பா
கையை வெட்டினாலே
கதிகலங்கி போயிடுவன் நான் -ஏதோ
கத்தி போடுவாங்களாம்..
ஒப்பிறேசன் தியேட்டருக்கு
உள்ளையும் விடாங்களாம்..

கட்டின நாள் தொடக்கம்
கண் கலங்க விட்டதில்லை
கட்டிலில கூட நான்
கடுமையா நடந்ததில்லை

ஒருநாள்

வேலையால வீட்ட வந்தன்
வெக்கத்தோட வந்து நிண்டாள்
கண்ணைப்பாத்தே கண்டுபிடிச்சன்
கள்ளியை கட்டிப்பிடிச்சு
கன்னத்தில கடிச்சுப்போட்டன்...

#ஆம்பிளை_ஆக்கிட்டாளே
அதுக்கு மேல என்ன வேணும்
அப்புறம் என்ன
அலப்பறைகள் ஆரம்பம்

சாப்பிடமாட்டாள்
சண்டைபிடிச்சு சாப்பிட வைப்பன்

பாலைக்குடிக்க சொன்னால்
பத்துக்கதை சொல்லுவாள்
பிடிச்சு வச்சு இடிச்சுப்பருக்குவன்
குடிச்ச சொச்சத்தையும்
மிச்சமில்லாமல் சத்தியெடுப்பாள்

உழுத்தம்மா களி எண்டால்
ஒடி ஒளிஞ்சிடுவாள்..
ஒருமாரிப்பிடிச்சு
வில்லங்கத்துக்கு தீத்தப்போனால்
விரலைக் கடிச்சிட்டு
வீட்டுக்க ஓடிடுவாள்

மாங்காய் சீசனில்லை
மாங்காய் கேப்பாள்

இருக்கேக்க கேக்கமாட்டாள்
இப்பதான் கேப்பாள்
பப்பா பழத்தில
பழயூஸ் குடிப்பமாம்...
எருமை மாட்டை
எங்கதேடிப் பிடிச்சனோ??

செல்லம் குடுத்திட்டன்
சின்னப்பிள்ளையாவே இருக்காள்
வயிறு வெளிய தள்ள
முழியும் தள்ளிச்சு..
அடிச்ச கூத்தெல்லாம்
அடங்கிப்போய்
அப்பா பயமா இருக்கடாவாம்..

அடியே போடி
ஆஸ்பத்திரி போக
அஞ்சு நிமிசத்தில பிறக்கும்
ஆட்டோவைப்பிடிச்சு
வீட்ட வந்திடலாம்
இதுக்குப் போய்
இப்பிடி அழுகிறாய்

இதைச் சொல்லிமுடிக்க
இதயம் துடிச்ச வேகம்
வெடிச்சிடும் போல இருந்திச்சு...

அப்பதான் எனக்கும்
அப்பா எண்டு
உணர வச்சாள்..

மோட்டச்சைக்கிள்ள
மோட்டோட்டம் ஓடினநான்
அறுபதுக்குள்ள அடக்கி ஓடினன்..

வீண் செலவெல்லாம்
வேண்டாமெண்டு முடிவெடுத்தன்
பகிடி ஃபன் போய்
மனிசி பிள்ளை எண்டு
மனசு மாறிச்சு..

மாசங்கள் போச்சு
வயித்திலதான் பிள்ளை
மடியில நான்தான் பிள்ளை

இன்னும் நாளிருக்கு
இடுப்பு வலியெடுத்து
இப்பதான் கொண்டுவந்தன்
கட்டின நாள் முதல் - அவள்
கத்திக் கண்டதில்லை

அப்பா அப்பா எண்டுறாள்
அழாதடி அம்மா எண்ட
அறைக்குள்ளயும் விடாங்களாம்...

என்னைப்பாத்தால்
இப்பிடி அழமாட்டாள்
ஏதோ செய்துதப்பா
என்ன பாடு படுறாளோ..

சமையல் கத்தியே
சாணை பிடிச்சால் தொடமாட்டாள்..
சுத்தி நிண்டு
கத்தியோட போனால் ??
கத்தி வைப்பாங்களாம்
கதைக்குறாளள் நேர்ஸ்மார்

ஒத்தைப் பிள்ளை காணும்
ஒருமாரிப்பெத்து வாடி
செத்துப்பிழைக்குறன்
சீக்கிரம் வெளிய வாடி..

பேறுவலி பெண்ணுக்குதான்..
ஆனால்
நூறுவலி ஆணுக்கு...


    நன்றி
#ஸ்ரீ_கோகுல்
  Sri Kogul

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.