Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, June 11, 2018

துளிர் விடும் காதல்...........!!!!!! கவிப்பிரியை சுஜனி

Currently online
நான் மிகவும் அதீத காதலுடன் இருக்கின்றேன் 
அந் நாட்கள் மிகவும் செந்தளிர் போல் என்றும் பசுமை நிறைந்த 
அழகான நாட்கள் அவை 
ஒரு வசந்தகாலம் 
அன்றைய வெயில் இன்றைய வெயிலை விட
மிக இதமாக இருந்தது.

வசந்தகாலம் தழுவி காலப்பொழுதொன்றில் 
என் காதல் இலைகளை ஓர் 
துரோகக் காற்றினால் அடித்துச்
செல்லப்பட்ட பொழுது இரு இலைகளை என்னோடு 
விட்டுச் செல்லப்பட்டது கசப்புகளும் பின் 
அதன் நினைகளுமாக, இரு இலைகள் இன்றும் 
கைகோர்த்த வண்ணம் நடை பயில்கின்றது.

இதோ பார் நான் எதையும் மறக்கவில்லை
ஆனால் உனக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பும் இல்லை ஏனென்றால் 
நீதான் மறதி நிறைந்த குளிர் இரவொன்றில் 
எதிர் திசையில் இருந்து வந்த காற்றொன்றிற்கு 
இசைவாகி இழுத்துச் செல்லப்பட்டாயே!

நான் இன்றும் உன் காதலை ஒரு 
குழுந்தையைப் போல் உமிழ்ந்து ருசித்து கொண்டிருக்கின்றேன் 
அன்று எனக்காக நகம் பதித்து 
செந்தமிழோடு போர்த் தொடுத்து எழுதிய கவிதைகளை 
நான் ரசிக்க என் தோள் படர்ந்து நீ பாடிய பாடல்களை ரசித்து 
என் மீது நீயும் உன் மீது நானும் வாழ்ந்திருந்தோம்

என்னை விரும்பிய நீயும் உன்னை
விரும்பிய நானும் இணைந்திருந்தோம் 
ஆனால் விருப்பற்றவர்களை பிடிப்பதே 
வாழ்வின் விருப்பமாக உள்ளது. 
இருந்தாலும் பரவாயில்லை 
நீ விட்டுச் சென்ற இரு இலைகள் இன்றும் 
துளிர் விட்டு மலர்ந்த படி இருக்கின்றது 
கசப்புகளும் நினைவுகளுமாய் அது போதும் 
நான் வாழ்வதற்கு.

நன்றி 
கவிப்பிரியை சுஜனி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.