Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, June 14, 2018

இந்து கலாசார பிரதியமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ளார் மஸ்தான் !!

Currently online
பிரதியமைச்சர் காதர் மஸ்தான், இந்து கலாசார பிரதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்து மதம் சாராத ஒருவருக்கு இந்து கலாசார அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலேயே தான் இந்த முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்து கலாசார பிரதியமைச்சுப் பொறுப்பை தனது கட்டுப்பாட்டிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். அதற்காக ஜனாதிபதியை இன்று சந்திக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.