Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் மரணம்!

Currently online
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினரான இ.குமாரசாமி நோய்வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம்  வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

கூட்டுறவாளரான இவர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தார் மற்றும் நிதி உதவி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்திருந்தார். இவர் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினருமாவார். 

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு கடந்த 2011 ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராக இருந்ததோடு இந்த வருடம்(2018) இடம் பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று உறுப்பினராக இருந்துள்ளார்.

இவரது இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று மதியம் 2.00 மணிக்கு சுன்னாகத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.