Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

இவள்_சூனியக்காரியே_தான்.........!!!!(வன்னியூர் கிறுக்கன்)

Currently online
சர்ப்பத்திரைக்குள்
சிதை பட்டு 
அவிழ்பட்டிருக்கும்
ஓர் 
இதயச் சுருளின் கதறலிது...!!!

வெப்பம் தனிந்திட்ட
இருட்டறையொன்றில்
பிளவு பட்டிருக்கும் மனதின் 
பசுமைச் சுமையினை
எளிதில் எவரும் 
அறிந்திட வாய்ப்பில்லை...!!!

சாத்தான்களின் 
ஆதிக்கக் 
குடியிருப்பில் தான் 
ஆண்மகன் என் 
உள்ளத்தினை
இவள் களவான்டிருக்க 
வேண்டும்...!!!

நான் சூனியக்காரியின்
காதலனா ?
இவள் சூழ்ச்சி வலைக்குள்
அகப்பட்டிருக்கிறேன்..!!!

இவளின் இரு விழியும் 
இரண்டு பிரிவுகள்; 
பகலுக்கு சூரியனாகவும் 
இரவுக்கு சந்திரனாகவும்

வெதுவெதுப்பான 
இளஞ்சிவப்பு நிறமுடையோள்
மெதுவாய்க் களவான்ட
தந்திரக்காரியிவள்.....!!!

இவளுதட்டில்
தேன் மதுரம் வழிந்தோடும்
வழியனைத்தும்
குழியினிலே தான் முடியும்...!!!

கஞ்சாப் புகை கொண்டு 
காதல் தீட்டுபவள்
நஞ்சு மொழி தீண்டி
நெஞ்சைக் கீறுபவள் 
கொஞ்சும் நடை காட்டி 
தஞ்சம் வீசுபவள்....!!!

இவள் இதயத்தினை
குத்திக் கிழித்து
எறிந்திட வேண்டும்; 
என் கனவுகளையும்
திருடிவிட நினைக்கிறாள்...!!!!

இவள் காதலி இல்லை 
அந்நியக்காரி
தமிழ் மொழி தெரிந்திட 
வாய்ப்பில்லை 
என் பாட்டி சுடும்
முறுக்கைப் போலவே 
இவளின் பேச்சு...!!!

இன்று இது போதும் 
என் இரவு விடிவதற்கு 
ஆயத்தமாகிறது 
நாளைக்கு 
என் கனவினில் நீ வராதே.....!!!

உனைக் காதலிக்கும்
நோக்கோடு
தூங்கிவிடுவானோ என
பயந்து கொண்டிருக்கிறாள்
என் வருங்கால மனைவி...!!!!


(நன்றி)
வன்னியூர் கிறுக்கன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.