Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, June 11, 2018

கஞ்சா கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்கள் ; பொலிஸார் வலைவீச்சு !!

Currently online
சிறுமி ஒருவருக்கு மது, கஞ்சா கொடுத்து தொடர்ந்து பலாத்காரம் செய்தவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். 

சென்னையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, அவர் வசிக்கும் அக்கம்பக்கம் வீட்டு இளைஞர்களுடன் நட்பு ரீதியில் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த இளைஞர்கள் சிறுமிக்கு மது, கஞ்சா கொடுத்து பழக்கப்படுத்தி சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் திருவள்ளூருக்கு அழைத்து சென்று அங்கு அடைத்து வைத்து சிறுமியை 7 இளைஞர்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

அண்மையில் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மது, கஞ்சா எடுத்துக் கொண்டதை சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார். சிறுமியிடம் மேலும் விசாரித்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில் பொலிஸார் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிப்பட்டவர்கள் அனைவரும் 18 வயதே நிரம்பிய இளைஞர்கள் ஆவர். மேலும் 5 பேரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி கூறியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து 7 பேரை கைது செய்ததாகவும், விசாரணை மேலும் நடைபெற்று வருகிறது என்றும் தெரியவந்துள்ளது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.