Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, June 11, 2018

"அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும்"ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதியிடம் உருக்கம்!!!

Currently online
"ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும்" என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கு   அன்புக்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையிலேயே ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். தாங்களும் இந்த நாட்டின் சிறுவர்கள் எனவும், எனவே தங்களின் நிலைமையினை கருத்தில் எடுத்து ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கோருகின்றோம் எனத் தெரிவிக்கும் அச்சிறுவர்கள்

அம்மாவை இழந்து அப்பாவை பிரிந்து நானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகின்றோம், அம்மாவுடன் வாழ்வதற்கு எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை எனவே அப்பாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு என்றாலும் ஜனாதிபதி மாமா உதவ வேண்டும் என ஆனந்தசுதாகரனின் மகன் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.