Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, June 11, 2018

இலங்கை கணினி அவசர பிரிவின் ஓர் எச்சரிக்கை!!!

Currently online
இலங்கை கணினி அவசர பிரிவு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.  அதாவது இணையத்தளம் ஊடாக இடம்பெறும் நிதி மோசடி தொடர்பில் வர்த்தகர்கள் அவதானமாக இருக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

மேலும்  இணையத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வோர், பொருட்களை கொள்வனவு செய்யும் போது கொடுப்பனவு செய்யும் கணக்குகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் தொடர்பான தகவல் உறுதி செய்த பின்னர் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். மின்னஞ்சல்கள் ஊடாக வரும் மோசடியாளர்களினால் வழங்கப்படுகின்ற கணக்கு இலக்கங்கள் மூலம் நிதி மோசடி செய்யப்படுவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறு 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.