Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, June 12, 2018

பரவி வரும் எலிக் காய்ச்சல் ; மக்களே அவதானம் !!

Currently online
2018ம் ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் இலங்கையில் 1,574 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பில் 92 பெரும் கேகாலையில் 97 பேரும் எலி காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் எலி காய்ச்சலால் 49 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தொற்றுக்குள்ளாகிய விலங்குகளின் சிறுநீர் மூலம் எலி காய்ச்சல் பரவுகிறது. பருவமழை தொடங்கியுள்ளதால், எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

எனவே குறித்த நோய் தொடர்பில் பொதுமக்கள் சுகாதாரத்துடன், பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கை சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.