Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

U19 இந்திய அணியில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்!

Currently online
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

ஆனால் அர்ஜூன் டெண்டுல்கரின் தெரிவு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக ஒரே ஒருமுறை 05 விக்கெட்டுகள் எடுத்த அர்ஜூன் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 43வது இடத்தையே பிடித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஆயுஷ் ஜம்வால் 50 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் அவர் இந்திய அணிக்கு தெரிவாகவில்லை. இதற்கு காரணம் அவர் 19 வயதை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆஷிஷ் கபூர், கியாநேந்திர பாண்டே, ராகேஷ் பரிக் அடங்கிய தெரிவுக்குழு அர்ஜூனைத் தெரிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘இந்த ஆண்டு 19 வயதைத் தாண்டுபவர்களை அணியில் சேர்க்கக்கூடாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவான கட்டளைகளை விதித்துள்ளார்.

இதனால் அர்ஜூனை விட சிறப்பாக விளையாடிய வீரர்கள் தெரிவாகவில்லை. அவர்கள் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவார் டிராவிட்.

எனவே அர்ஜூனை விடவும் திறமைசாலிகளாக உள்ளவர்கள் தகுதி பெறவில்லை. அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலைக் கவனித்தால் 15 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தவர்களில் அர்ஜூன் மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

மற்றவர்கள் எல்லாம் சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளார்கள். ஆல்ரவுண்டர் அஜய் தேவ் கௌட் 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆனால், மிதவேகத்தில் பந்துவீசுபவர். அர்ஜூன் மட்டுமே அதிவேகபந்து வீச்சாளர்.

உனாவில் நடைபெற்ற U19 மண்டலங்களுக்கிடையேயான போட்டியில், ஓர் ஆட்டத்தில் 37 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். அவருடைய திறமையைப் பயன்படுத்திக்கொள்ள தெரிவுக்குழு விரும்பியுள்ளது. அதனால்தான் தெரிவாகியுள்ளார் என தெரிவித்துள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.