Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 08, 2018

ஏறாவூரில் மின்கம்பத்துடன் வேன் மோதியதில் 09 வயது சிறுவன் பலி;07பேர் படுகாயம்!

Currently online
ஏறாவூரில்  பொலிஸ் பிரிவில் உள்ள வந்தாறு மூலை கிழக்கு பல்கலைக்கழககத்துக்கு முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது 09 வயதுடைய சிறுவன் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன் வேனில் பயணித்த 07 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஏறாவூரை சேர்ந்தவர்களே குறித்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏறாவூர் விதானையார் வீதியை சேர்ந்த ரமீஸ் மௌலவியின் மகனான சாபித்(வயது-9) என்பவரே மரணமடைந்தவராவார். இவரது சடலம் ஏறாவூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்தில் மரணமடைந்த சிறுவனின் தந்தை ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டு கொண்டிருக்கையிலே குறித்த வான் மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.