Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 28, 2018

ரவாங் சட்டவிரோத சூதாட்ட மையம் சுற்றிவளைப்பு;10 வயது சிறுமி உட்பட 114 பேர் கைது!

Currently online
ஜாலான் பண்டார் ரவாங் மூன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 10 வயது சிறுமி உட்பட 114 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது புக்கிட் அமான் சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீசார் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை 06 மணியில் இருந்து இன்று(சனிக்கிழமை) அதிகாலை 01 மணி வரையில் 10 இடங்களைச் சோதனையிட்டதைத் தொடர்ந்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 42 பேர் சூதாட்ட மையங்களை நடத்துபவர்கள் எனவும் எஞ்சிய 72 பேர் அவர்களின் வாடிக்கையாளர்கள் எனவும் அச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தேசிய போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ புஸி ஹருண் கூறியுள்ளார்.

மேலும் 18-59 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்த இடத்தில் 10 வயது சிறுமியும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.