Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 12, 2018

மாதந்தோறும் 10ஆம் திகதி எரிபொருளின் விலையில் மாற்றம் : அமைச்சர் ராஜித சேனாரத்ன !!!

Currently online
ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி ஏரிபொருட்களுக்கான விலை,  மாறுமெனத் தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அதனடிப்படையில் எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். 

நேற்று  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பானது  ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற​போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்கப்பூர் விலை நிர்ணயத்துக்கு அமைய உள்நாட்டில் எரிபொருள் விலையேற்றம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், அமைச்சரவையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமையவும், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் நிறுவனங்கள் என்பனவற்றுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமையவும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு, மக்களைப் பெருமளவில் பாதிக்காத வகையில் அதில் ஒரு பங்கை அரசாங்கம் ஏற்றிருப்பதாகவும், விலை அதிகரிப்பு 14 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டி உள்ள நிலையில் 8 ரூபாயே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார்.

வளர்முகநாடுகளில் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படும், இந்தியாவை எடுத்துக்கொண்டால் வாரம் ஒரு தடவை மாற்றம் நிகழும். சகல எரிபொருள் நிலையங்களும் கணினி முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அது சிக்கல் இன்றி முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையில் அவ்வாறில்லை. அதனால் தான் குறிப்பிட்ட ஒரு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாதா மாதம் 10ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்போ அல்லது குறைப்போ மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறியமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.