Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 19, 2018

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு !!

Currently online
உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் கங்கோத்ரி நெடுஞ்சாலையில் அரசு பேருந்து 25 பேருடன் பயணித்துக்கொண்டிருந்தது.  அப்போது சூர்யதார் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி 250 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். 

சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  காயமடைந்தவர்கள் ஹெலிகாப்படர் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து மாஜிஸ்ட்ரேட் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.