Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 25, 2018

10 ரூபாவை தொலைத்ததால் குழந்தைகளை மின்கம்பத்தில் தொங்கவிட்டு அடித்த கொடூர தந்தை !!

Currently online
உத்தரபிரதேசத்தில் உள்ள ஜலால் என்ற இடத்தில் இஸ்லாம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஒரு பெண், இரண்டு பையன்கள் என  3 குழந்தைகள்.

நேற்று தனது குழந்தைகளை கூப்பிட்டு, 10 ரூபாய் கொடுத்து சந்தைக்கு போய் ஏதோ ஒரு பொருளை வாங்கிட்டு வரச் சொன்னார் இஸ்லாம் .

அந்த குழந்தைகளும் சந்தைக்கு போனார்கள். சந்தையில் கூட்டம் அதிகம் என்பதால் அவங்க அப்பா கொடுத்த 10 ரூபாயை எங்கேயோ போட்டுவிட்டார்கள்.

காசு தொலைந்து போனதும் 3 பேருக்கும் உடம்பெல்லாம் பயம் வந்து ஒட்டிக் கொண்டது. 10 ரூபாவை காணோமே, வீட்டுக்கு போனால் அப்பா அடிப்பாரே என 3 குழந்தைகளும் காசை தேட ஆரம்பித்தனர்.

சந்தையின் கூட்டத்தில் அந்த குழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டும், அப்பாவின் கோபத்தை நினைத்தும் தேடிக் கொண்டே இருந்தனர். இதற்கிடையே பிள்ளைகள் இவ்வளவு நேரம் ஆகியும் திரும்பி வரலையே என்று, இஸ்லாம் சந்தைக்கே தேடிக்கொண்டு வந்துவிட்டார். அங்கே அப்பாவை பார்த்ததும் 3 பிள்ளைகளும் "காசு தொலைஞ்சு போச்சு" என்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாம், தன் குழந்தைகளை அங்கிருந்த ஒரு மின்கம்பத்தில் தலைகீழாக தொங்கவிட்டு சரமாரியாக அடிக்க தொடங்கிவிட்டார். 

இப்படி 3 குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியதால் குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறினர். அந்த அலறலை கேட்டு அங்கிருந்த மக்கள் எல்லோரும் திரண்டு வந்து குழந்தைகளை மின்கம்பத்திலிருந்து அவிழ்த்து மீட்டனர்.

பிஞ்சுகளிடம் தன் வீரத்தையும், வெறியையும், முரட்டுத்தனத்தையும் காட்டிய இஸ்லாம் பற்றி பொலிசில் அந்த மக்களே புகாரும் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட பொலிசாரும் கடுமையான தண்டனை வழங்குகிறோம் என உறுதி அளித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.