Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 20, 2018

கனமழையால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு !!

Currently online
கேரளாவில் கனமழை காரணமாக பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கேரளாவில் கனமழை காரணமாக இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

கடந்த மே 29-ம் திகதி கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகின்றது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 

பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, ஏர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. கேரளாவின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.  இதேபோன்று ரெயில் தண்டவாளங்களில் நீர் சூழ்ந்து சிக்னல் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கண்ணூர் மாவட்டத்தில் ரூ. 5.43 லட்சம் வரையில் வேளாண்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மேலும் 30க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் இந்த கனமழை காரணமாக கேரளாவில் உள்ள பாலக்காடு, மழம்புழா, பரப்பிக்குளம் மற்றும் ஆழியார் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 29-ம் திகதி தொடங்கிய தென்மேற்கு பருவமழைக்கு 116 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஜூலை 9-ம் திகதியில் இருந்து 2-வது முறையாக பெய்ய தொடங்கிய கனமழைக்கு இதுவரை 110 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.