Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 20, 2018

படகு கவிழ்ந்து விபத்து ; அமெரிக்காவில் 11 பேர் உயிரிழப்பு !!

Currently online
அமெரிக்காவில் பிரான்சன் பகுதியில் உள்ள டேபிள் லாக் ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் பிரான்சன் பகுதியில் உள்ள டேபிள் லாக் என்ற ஏரி சுற்றுலா பயணிகளை கவரும் பொழுது போக்கும்  தலமாக உள்ளது.

இந் நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் 30க்கும் ஏற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் சென்றுகொண்டிருக்கும் போது ஏரியின் மையத்தில் திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இந்த படகில் பயணம் செய்வதவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கினர்.  இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் ஏரியில் தத்தளித்துக்கொண்டிருந்த 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 8 பேர் உடல்கள் மீட்டகப்பட்டது. 

மேலும் மூழ்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உயிரிழந்தவர்கள் 11 பேர் என்றும் அவர்களில் சிலர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 4 ஆண்கள் 3 குழந்தைகள் ஆவார். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.