Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 31, 2018

எதிர்வரும் 11ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ளார் இம்ரான்கான் !!

Currently online
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக தெரிவாகியுள்ள இம்ரான்கான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 25ஆம் திகதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஆட்சியமைக்க 137 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதைத்தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 11-ஆம் திகதி, தான் பதவியேற்க இருப்பதாக இம்ரான்கான் நேற்று முன்தினம் அறிவித்தார். 

கைபர் பக்துங்வா மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அவர், அந்த மாகாண முதல்-மந்திரி பெயரையும் விரைவில் அறிவிக்க இருப்பதாக கூறினார்.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியாக இணைந்து செயல்பட நவாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல். (நவாஸ்) கட்சியும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் முடிவு செய்துள்ளன. இரு கட்சிகளும் முறையே 64, 43 இடங்களுடன் வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பதால், இம்ரான்கானுக்கு மிகப்பெரும் சவால் காத்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.