Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 28, 2018

தஞ்சையில் சிலிண்டர் வெடித்து விபத்து;13 வீடுகள் தீக்கிரை!

Currently online
தஞ்சையில் ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 13-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததால் வீடுகள் அனைத்தும் சேதமடைந்தன. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நகரின் மையப்பகுதியில் உள்ள மேற்கு எல்லையம்மன் கோயில் தெருவில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை பால்ராஜ் என்பவரின் வீட்டில் எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்தனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்கும் பரவியதில் 13 குடிசை வீடுகள் தீக்கு இரையாகின. மேலும் வீட்டிற்குள் இருந்தவர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியேறியமையால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

தீயணைப்பு துறையினர் சிறுது நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் 15,00,000 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.