Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 31, 2018

16 வயது பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்பு !!

Currently online
பாடசாலை மாணவி(வயது-16) ஒருவர் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் சடலம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி 10 ஆம் ஆண்டில் கல்வி கற்றுவரும் நாவற்கேணி – மயில்வாகனம் வீதியில் வசிக்கும் செல்வேந்திரன் நிரோனிகா என்பவராவார்.

மாணவியின் சடலம் உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம் மாணவி  மட்டக்களப்பு பகுதியிலுள்ள சிறுமிகள் விடுதியொன்றில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்துள்ளார். 

இந் நிலையில் பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு விடுதியை விட்டு சென்ற மாணவி வேறொரு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.