Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 20, 2018

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (20.07.2018)

Currently online
மேஷம்
தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்
புதிய திட்டங்கள் தீட்டி அதை செயல்படுத்தி அதில் வெற்றியும் காண்பீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள். 

கடகம்
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.

சிம்மம்
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.

கன்னி
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள். 

துலாம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிக்கனமாக இருங்கள். வாகனம் பழுதாகும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து விலகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு
உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

மகரம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.

மீனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.