Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 16, 2018

பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கும் போது கூடாரம் சரிந்து விழுந்ததில் 20 பேர் படுகாயம் !!

Currently online
பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூடாரம் சரிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட கூடாரம் திடீரென சரிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது.

இதை கவனித்த பிரதமர் மோடி பேச்சை நிறுத்திவிட்டு பாதுகாவலர்களிடம் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தினார்.

இச் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் பிரதமர் மோடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.