Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 21, 2018

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்!!!!(21.07.2018)

Currently online
மேஷம்: 
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள். 

ரிஷபம்: 
எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள். 

மிதுனம்: 
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புதுப் பொறுப்பை ஒப்படைப்பார். புதுமை படைக்கும் நாள். 

கடகம்: 
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். பழைய பிரச்னைகளை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.     

சிம்மம்: 
உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.

கன்னி: 
கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் இருக்கும். எங்கும் எதிலும் முதலிடம் பெறுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்: 
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: 
சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கை பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

தனுசு: 
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பணப்பலம் உயரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். சிறப்பான நாள்.

மகரம்: 
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்: 
எதிர்பாராத பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

மீனம்: 
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.    
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.