Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (24.07.2018)

Currently online
மேஷம்
மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

ரிஷபம்
பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மாலை 6.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள். 

மிதுனம்
இங்கிதமாகவும், இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்களால் மற்ற வர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். 

கடகம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வரு வார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டா கும். நினைத்தது நிறைவேறும் நாள். 

சிம்மம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 


கன்னி
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த- பந்தங்கள் தேடி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள். 

துலாம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள். 


விருச்சிகம்
மாலை 6.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.  

தனுசு
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதரங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 6.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.     


மகரம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள்.  

கும்பம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.  

மீனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது வேலைக் கிடைக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புத்துணர்ச்சி தொடங்கும் நாள். 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.