Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 11, 2018

சுவிஸில் 25,000 இளைஞர்கள் கடவுச்சீட்டு பெற தகுதியானவர்கள்!

Currently online
சுவிஸர்லாந்தில் சட்டத்திருத்தம் மேற்கொண்டதன் பின்னர் குடியுரிமை கோரும் இளைஞர்களின் எண்ணிக்கை கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸர்லாந்தில் குடியுரிமை விதிகளில் திருத்தம் மேற்கொண்டதன் பின்னர் கடந்த பிப்ரவரி 15 ஆம் திகதி முதல் ஜூன் இறுதி வரையான காலகட்டத்தில் வெறும் 482 இளைஞர்களே குடியுரிமை கோரியுள்ளனர்.

இவர்களுள் இத்தாலியர்கள் 255 அதிக எண்ணிக்கையில் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதுடன், துருக்கி (65), கொசாவோ(38), ஸ்பானியர்கள்(17) மற்றும் போர்த்துக்கல் (17) என எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுவிஸர்லாந்தில் உள்ள மூன்றாம் தலைமுறையினருக்கு சாதகமாக அமையும் வகையில் சுவிஸர்லாந்தின் குடியுரிமை விதிகளை எளிமைப்படுத்துவதற்கு சுமார் 60.4 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

மேலும் 9 முதல் 25 வயதுக்கு உட்பட்ட சுமார் 25,000 இளைஞர்கள் சுவிஸர்லாந்தின் கடவுச்சீட்டு பெற தகுதியானவர்கள் என ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.