Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 10, 2018

சண்டக்கோழி - 2 ரிலீஸ் திகதி அறிவிப்பு !!

Currently online
இரும்புத்திரை திரைப்படத்திற்கு பிறகு தற்போது சண்டக்கோழி -2 பட ரிலீசுக்கு தயாராகிவிட்டார் விஷால். 

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடித்துள்ளார் விஷால்.

விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் வரலட்சுமி இந்த படத்தில் வில்லியாக நடித்துள்ளார். விஷால் ராஜ்கிரன் காம்போ அப்படியே உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், ஆயுதபூஜை நாளான அக்டோபர் 18-ஆம் திகதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. 

பெரிய படங்களுக்கு எளிதில் ரிலீஸ் திகதி கிடைத்துவிடுகிறது. ஆனால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரிலீஸ் திகதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு படத்தின் ரிலீஸ் திகதி குறித்து முன்கூட்டியே கடிதம் எழுதி அனுமதி வாங்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 

இந்த புதிய விதிமுறையை பின்பற்றியே நாங்கள் சண்டக்கோழி 2 திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை முடிவு செய்துள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின், பட வெளியீட்டு ஒழுங்குமுறைக் குழுவின் ஒப்புதல் பெற்ற கடிதத்தை விஷால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன், மிகச்சரியான திட்டம், இந்த வருடத்தில் வெளிவரும் எல்லா படங்களுக்கும் இதை கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் விதிமீறல்கள் நடக்காது. உங்களால் தான் இதை சாத்தியப்படுத்த முடியும் என்று ரீட்வீட் செய்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.