Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 28, 2018

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை;30 பேர் பலி!

Currently online
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதனால் மழை காரணமாக 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று(வெள்ளிக்கிழமை)  மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தால் நிரம்பிக் காணப்பட்டது.

மேலும் வீடுகள் இடிந்தும் இடி, மின்னல் தாக்கியும் ஆக்ராவில் 05 பேரும், மெயின்புரியில் 04 பேரும், முசாபர் நகர், கஸ்கஞ்ச் பகுதிகளில் 03 பேரும், மீரட், பெரெய்லியில் 02 பேரும் பலியாகியுள்ளனர்.

மேலும் கான்பூர், மதுரா, காசியா பாத், ரே பரேலி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 30 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் 10-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுராவில் அதிக பட்சமாக 19 செ.மீ. மழை பதிவானது. இந்த கனமழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முடுக்கி விட்டுள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்கவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.