Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 30, 2018

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (30.07.2018)

Currently online
மேஷம்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். 

ரிஷபம்
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள். 

மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள். 

கடகம்
சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்தி கள் வரும். நிதானம் தேவைப்படும் நாள். 

சிம்மம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள். 

கன்னி
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புகழ் பெற்ற பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 

துலாம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புதுமை படைக்கும் நாள். 

விருச்சிகம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர் கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்கு வது லாபகரமாக அமையும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள் முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.  பெருந்தன்மையுடன் நடந் துக் கொள்ளும் நாள்.  

மகரம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.புது அத்தியாயம் தொடங்கும் நாள்.  

கும்பம்
ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டம். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.   

மீனம்
எடுத்த வேலையை முழுமையாக முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வேண்டாமே. உத்யோகத்தில் சக ஊழி யர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.