Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 07, 2018

டோனியின் 37வது பிறந்ததினம்;சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள்,பிரபலங்கள் வாழ்த்து!

Currently online
இந்திய ஒருநாள் அணியின் முன்னாள் கேப்டன் டோனி இன்று 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்பட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இந்திய ஒருநாள் அணி விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான மகேந்திர சிங் டோனி இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். டோனி ஜூலை 7, 1981-ல் பிறந்தவர்.

மேலும் இதுவரை இந்தியாவிற்காக டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கடந்த டிசம்பரில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 318 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவதால் இங்கிலாந்தில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உள்பட பல்வேறு பிரபலங்கள் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் டோனி ரசிகர்கள் #HappyBirthdayMSDhoni என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி அவரின் பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

டோனியுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. அதில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜாம்பவான் உங்களை போல் யாருமே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் மூன்று வித தொடர்களான 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர், 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகியவற்றை கைப்பற்றிய ஒரே கேப்டன் டோனி என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ஒருநாள் அணியின் முன்னாள்  தலைவர்  டோனி இன்று 37ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

2004-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 33 அரைசதம் உட்பட 4,876 ரன்களும், 318 ஒருநாள் போட்டிகளில் 10 சதம், 67 அரைசதம் உட்பட 9,967 ரன்களும், 92 டி20 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 1,455 ரன்களும் குவித்துள்ளார். 

மொத்தம் 602 கேட்சுகளும், 178 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 

மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 500 சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய 3 ஆவது இந்தியர் என்ற சாதனையையும் மகேந்திர சிங் தோனி படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.