Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 17, 2018

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களிடமிருந்து 37 கிலோ கிராம் கஞ்சா மீட்பு !!

Currently online
அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 37 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடல் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டபோது அதற்குள் 37 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன, அதனையடுத்து அதில் பயணித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளுக்காக மீனவர்கள் நால்வரும் காங்கேசன்துறைக்கு அழைத்துவரப்பட்டதுடன், சான்றுப்பொருள்களும் எடுத்துவரப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் இந்த வழக்கு காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவதுடன், மீனவர்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.