Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 30, 2018

யாழில் வாள்வெட்டு குழுவினரின் அட்டகாசம் ; 3 வீடுகள் சேதம் !!

Currently online
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மாலை மூன்று  இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முகத்தை மூடியவாறு நான்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற எட்டு பேர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி மற்றும் புது வீதி, கொக்குவில் பிரம்படி வீதி ஆகிய இடங்களில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாள்வெட்டு குழுவினர் வீடுகளில் உள்ள பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன், மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும் தீ வைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.