Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 10, 2018

பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ; 60 பேர் வைத்தியசாலையில் !!

Currently online
குருநாகல் பகுதியில் இரண்டு தனியார் பேரூந்துகள் மோதிய விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்து கலேவெல, குருநாகல், கொக்கரெல்ல, மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெல்சிரிபுர கொக்கரெல்ல பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கிப் பயணித்த பேரூந்தும், எம்பிலிப்பிடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேரூந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பேரூந்துகளினதும் சாரதிகள் உட்பட சுமார் 20 பேர் வரை கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதி வேகத்துடன் இரண்டு பேரூந்துகளும் செலுத்தப்பட்டதாகவும் இரண்டு சாரதிகளும் நன்கறிந்தவர்கள் என்பதால் விளையாட்டாக பேரூந்துகளை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேரூந்துகளும் அடிக்கடி இவ்வாறு விளையாட்டு தனமாக செலுத்தபடுவதாக பயணிகள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன சாரதிகளின் பாதுகாப்பற்ற விதத்தில் பயணித்த விதமும் அவர்களின் விளையாட்டுத்தனமுமே இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.