Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 29, 2018

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 10 பேர் பலி!(படங்கள்)

Currently online

இந்தோனேசியாவில் 6.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்து 33 பேர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  

மேலும் பல்வேறு தீவுகளை கொண்டுள்ள இந்தோனேசியா அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.  இதன் காரணமாக இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தோனேசியாவின் மத்திய பகுதியிலுள்ள லொம்போக் ( Lombok) தீவில் இன்று (29) அதிகாலை 5.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற லொம்போக் தீவு பாலி தீவிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடலுக்கு அடியில் 07 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.


இந்தோனேசியாவில் 2004 இல9.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 220 000 பேர் உயிரிழப்பும், உடமை இழப்பும் ஏற்பட்டடிருந்தது.

இன்றைய நிலநடுக்கத்தை தொடர்ந்து எவ்விதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.