Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 30, 2018

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ; 15 பேர் உயிரிழப்பு !!

Currently online
இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற இடத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிறது.

அந்த வகையில், அங்கு சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிற லம்பாக் தீவில் நேற்று காலையில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

மாதரம் என்ற நகரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் 7 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த நில நடுக்கத்தால் செம்பலூன் என்ற நகரம்தான் அதிக பாதிப்புக்கு உள்ளானது. அங்கு மின்சாரம் தடைபட்டது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்தன. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 160 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.