Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 19, 2018

துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்க 6 பேர் கொண்ட மருத்துவக்குழு !!

Currently online
பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்க 6 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 12 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையின் போது குற்றவாளிகள் அடுத்தடுத்து கூறிய தகவல்களால் பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளியான 66 வயதான ரவிகுமார் என்ற நபர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டர் வேலை பார்த்தவர்.. 

இவர் இந்த வேலைக்கு வருவதற்கு முன், அதே பகுதியில் உள்ள பிரபலமான மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அதன் பின்னரே லிப்ட் ஆபரேட்டர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு வேலை பார்த்த போது பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும் அதன் விவரங்களையும் தெரிந்து கொண்ட ரவிக்குமார்,  அந்த மருந்துகளையும்,  ஊசிகளையும் பயன்படுத்தி சிறுமியை பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்க 6 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கபட்டு உள்ளது. குழந்தைகள் நல மருத்துவர், மன நல மருத்துவர், மன நல ஆலோசகர், நரம்பியல் மருத்துவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் குழந்தைக்கு சிகிச்சை தொடங்கப்படுகிறது. காவல் துறை அனுமதியுடன் சிறப்பு மருத்துவக்குழு  சிகிச்சை அளிக்கிறது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.