Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 05, 2018

த்ரிஷாவின் புதிய ட்வீட் ; இரசிகர்கள் சந்தோஷத்தில்!

Currently online
தமிழ் முன்னணி நடிகையாக வலம் வருபவரும் மௌனம் பேசியதே படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை திரிஷா தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

திரைத்துறைக்கு அறிமுகமாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருந்து வருகிறார்.

தற்போது இவரது நடிப்பில் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

படப்பிடிப்பு இல்லாததால் நியூயார்க்கிற்கு சுற்றுலா சென்றார் திரிஷா. அங்கு உயரமான கட்டிடத்தில் நின்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ‘A table for two ❤️❤️’ என்று பதிவு செய்திருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், திரிஷா காதல் வலையில் விழுந்து இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் யார் அது? என்று கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.

திரிஷா இதற்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து, திருமணம் வரை சென்று நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.