Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 07, 2018

குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கும் சுழியோடிகள்!

Currently online
தாய்லாந்தில் குகைக்குள் கடந்த 23ம் திகதி சிக்குண்ட சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சிகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை சுழியோடிகள்  வழங்கி வருவதாக சியாங் ராய் பிராந்திய ஆளுநர் நரோங்சாக் ஒசொத்தனாகோர்ன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வார காலமாக சிக்கியுள்ள 12 சிறுவர்களும் அவர்களது பயிற்றுவிப்பாளரும் உயிருடன் இருப்பதாக 09 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சிறுவர்களின் உடல்நிலை தற்போது தேறிவருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் குகைக்குள் சிக்கியுள்ள தமது பிள்ளைகளுக்கு அவர்களது பெற்றோர் கடந்த வியாழக்கிழமை கடிதங்களை அனுப்பியதைத் தொடர்ந்து கவலைப்பட வேண்டாம் எனவும் தாம் அனைவரும் உறுதியுடன் இருப்பதாகவும் பெற்றோருக்குக் சிறுவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதே நேரம் வித்தியாசமான வகை உணவுகள் வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

அத்துடன் பயிற்றுவிப்பாளர் எக்கபோல் சன்டவோங் பெற்றோரிடம் தான் மன்னிப்பு கோருவதாக கடிதம் ஒன்றில் எழுதியுள்ளார். மேலும் மீட்புப் படையினர் நல்லமுறையில் கவனித்துக் கொள்வதால் தற்போது அனைவரும் பாதுகாப்பாக உள்ளார்கள் எனவும் அனைத்துச் சிறுவர்களின் பெற்றோருக்கும் தெரிவித்துள்ளார்.

குகைக்குள்ளிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததன் பின்னர் தமது குடும்பத்தினருடன் முதலாவதாக இந்தக் கடிதங்களின் மூலம் தொடர்புகொண்டுள்ளனர்.

 அத்துடன் குகைக்குள் வாயுத் தாங்கியைக் கொண்டு செல்ல முற்பட்ட போது தாய்லாந்தின் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  
மேலும் தாய்லாந்து நாட்டுக்கு உதவ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கடற்படை வீரர்கள், கடலில் தேடுதல் வேட்டையில் சிறப்பு வல்லுனத்துவம் பெற்ற வீரர்கள் எனப் பலரும் வந்துள்ளனர். இதனால் ஏற்குறைய ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வரை மீட்புப் பணியின் நிமித்தம் குகைக்குள் செல்வதற்கு எதிர்பார்த்து நூற்றுக்கும் அதிகமான குழிகளைத் தோண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.