Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள செம்மணி மனித எச்சம் தொடர்பான அகழ்வு !!!

Currently online
தற்போது  செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீர்பாசன திணைக்களம் யாழ். செம்மணி - நாயனர்மார்கட்டுப்பகுதியில் அமைத்து வரும் நிலக்கீழ் நீர் தொட்டிக்காக மண் அகழ்வினை மேற்கொண்ட போது மனித எலும்பு எச்சங்கள்  அதில் ஒர் பகுதியில் இருந்து வெளிப்பட்டிருந்தன.

இவை குறித்து  யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை பொலிஸார் யாழ். நீதிவான் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர். இதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்கரன் அங்கு அகழப்பட்ட மண்ணினையும் முழுமையாக பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சட்ட வைத்திய அதிகாரி மயூரதன், யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் இவ் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.