Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 27, 2018

வெலிக்கடை சிறைச்சாலையில் மோசமான கொடூரங்கள் ; புலனாய்வுப் பிரிவு கலைப்பு!

Currently online
கொழும்பில் அமைந்துள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் இயங்கி வந்த புலனாய்வுப் பிரிவு பகுதி  நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் உத்தரவின் பேரில் கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சிறைச்சாலை திணைக்களத்தில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே புலனாய்வுப் பிரிவை கலைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யுத்தக் காலத்திலும் அதற்குப்பின்னரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் தொடர்ந்தும் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்த புலனாய்வுப் பிரிவினரால் மிகவும் மோசமான கொடூரங்களுக்கு ஆளாகியிருந்ததாக பல தடவைகள் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமையும்  இங்கு குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.