Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 29, 2018

அனைத்துலக நீதி வல்லுநர்கள் ஆணைய உறுப்பினராக டத்தோ அம்பிகா!

Currently online
அனைத்துலக நீதி வல்லுநர்கள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட ஐவரில் வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும், பெர்சே 2.0 பேரணி அமைப்பின் தலைவருமான டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசன் ஒருவர் ஆவார்.

அத்துடன் ஹாக்காம் என்ற தேசிய மனித உரிமை அமைப்பின் தலைவராகிய அம்பிக்காவுடன், கிர்கிஸ்தானைச் சேர்ந்த நீதிபதி சினாரா அய்டார்பெகோவா, எகிப்த்தின் மனித உரிமை போராட்டவாதி கமால் எய்ட், ஆப்பிரிக்க மனித உரிமை ஆணையர் ஜேம்சினா எஸ்ஸி, இஸ்ரேலிய வழக்கறிஞர் மைக்கல் ஸ்பார்ட் ஆகியோர் ICJ-வின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அந்த ஆணையத்தின் தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ரோபர்ட் கே.கோல்ட்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அம்பிகாவின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில் உலக நாடுகள் அவருக்கு விருதுகளையும், சாதனைச் சின்னங்களையும் வழங்கிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ICJ ஆணையத்தில் பல நாடுகளிலும் இருந்து பல்வேறு சட்ட மரபுசார் நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். மனித உரிமைகள், சட்ட விதிகளைப் பேணிப் பாதுகாக்க, மேம்படுத்த சட்ட வல்லுநர்களின் பங்கை திரம்படுத்துவதற்கான சட்டங்களை அவ்வாணையம் நெறிப்படுத்துகிறது.

அத்துடன் அதன் கிளைகள் தேசிய மட்டத்தில் 70 கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகின்றன. அதன் உறுப்பினர்களாக உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சட்டக் கல்விமான்கள், மற்றும் சட்ட மாணவர்கள் போன்றோர் தெரிவு செய்யப்படுகின்றனர்.

டத்தோ அம்பிகா 2009 ம் ஆண்டு அமெரிக்காவில் சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதை அவர் பெற்றார். 2011- ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் செவெலியர் விருதையும் அவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.