Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 23, 2018

இதுவே என் காதல்..............!!!!!! கவிப்புயல் சரண்

Currently online
உன்னுடன் நான்
என்னுடன் நீ
நம்முடன் எம் குழந்தை 
நமக்கென்று ஓர் உலகு

இது போதும் எனக்கு .......

காற்றிடை ஓலை வீடு
கதவோரம் தென்றல் காற்று
விடிந்த பின் குட்டி தூக்கம்
விளையாடும் உந்தன் விரல்

இது போதும் எனக்கு..........

அணைத்திட எந்தன் மடி 
தலை கோத உந்தன் கரம்
இனிப்புடன் காலை முத்தம் 
சிரிப்புடன் வழியனுப்பு

இது போதும் எனக்கு..........

காலையில் செல்லச் சண்டை
கவனமாய் கை கலப்பு 
கண நொடி மறையும் கோபம்
கண்களில் துளிர்க்கும் ஈரம்

இது போதும் எனக்கு .........

இரவினில் ஊட்டும் சோறு
இருதயக் குழியின் காதல்
இசைத்திடும் மழலைக் குரல்
இல்லறம் இயங்கும் திசை

இது போதும் எனக்கு.........

முகம் தொடும் மூச்சு காற்று
முட்டிடும் மூக்கின் நுனி
கரம் கோர்க்கும் எங்கள் விரல்
உடல் தொடும் உந்தன் உஷ்ணம்

இது போதும் எனக்கு...........

உனை வெல்ல நம் குழந்தை
அழுதிடும் செல்லக் குரல்
பிடித்திடும் பிஞ்சு விரல்
அணைத்திட சொட்டும் துளி

இது போதும் எனக்கு...........


         நன்றி 
கவிப்புயல் சரண்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.