Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 21, 2018

ஜனாதிபதி தலைமையில் தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை நிர்மாணம்!

Currently online
இலங்கை சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(21.07.2018) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

குறித்த வைத்தியசாலை தெற்காசியாவின் மிகப் பெரிய சிறுநீரக வைத்தியசாலையாக தொழிற்படும். 

அத்துடன் பொலநறுவையில் 1200 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதில் நவீன ஆய்வு கூடங்களும் அமையவுள்ளன. 

மேலும் மொத்தமாக 200 கட்டில்களைக் கொண்ட வாட்டுத் தொகுதி, குருதி வடிகட்டல் இயந்திரங்களுடன் கூடிய வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, விசேட சிறுநீரக பிணியாய்வு கட்டடத்தொகுதி, சிறுநீரக மாற்று சேவைக்கான ஆறு சத்திர சிகிச்சை கூடங்கள் போன்றவையும் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த வைத்தியசாலையை இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்;த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஜனாதிபதி விடுத்த  வேண்டுகோளை ஏற்று சீன அரசாங்கம் வழங்கும் முழுமையான நன்கொடையால் நிர்மாணிக்கப்படும் விசேட சிறுநீரக வைத்தியசாலை ஆகும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.