Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 08, 2018

யாழ்.கோட்டைக்குள் குடியேறவிருக்கும் இராணுவத்திரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

Currently online
யாழ்ப்பாணம் கோட்டையில் ஒரு பகுதியை இராணுவ முகாம் அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  

யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்பாக இன்று(08.07.2018)பிற்பகல் 02.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி கே.சுகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் “வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, மக்களே நில ஆக்கிரமிப்புக்கு எதிராக அணிதிரளுங்கள், எங்கள் மண்ணைவிட்டு இராணுவமே வெளியேறு, யாழ்.கோட்டையை மீண்டும் ஆக்கிரமிப்பு இடமாக மாற்றாதே” போன்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.