Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 23, 2018

போர் நிறைவுக்கு பின்னர் யாழ்ப்பாணம் மோசமான நிலையில் காணப்பட்டது ; ரணில்!

Currently online
யாழில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்த நிலையில், வட மாகாணத்தில் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் 100 பில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போர் நிறைவுக்கு பின்னர் மோசமான நிலையில் காணப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அந்த நிலைமையை மாற்றியமைக்க முடிந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் உள்ள பணத்தில் குறித்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு முதலீடு செய்ய வேண்டியுள்ளதுடன், பிரதான முதலீட்டில் தாம் முதலீடு செய்த பணத்தை போன்று 3 மடங்கு வருமானம் வரி செலுத்தாமலே பெற முடியும் என பிரதமர்  குறிப்பிட்டிருந்ததுடன், புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் பெருந்தொகை பணத்தை தாயகத்திலுள்ள தமது உறவுகளுக்கு நாள்தோறும் அனுப்பி வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.