Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 10, 2018

கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரிச் சங்குடன் கிளிநொச்சி இருவர் கைது!

Currently online
நேற்று இரவு ஒரு கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை சுற்றி தேடுதல் மேற்கொண்ட நிலையில், கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் கடத்த முற்பட்ட இரு சந்தேக நபர்களும்  டொல்பின் ரக வாகனமொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

வலம்புரிசங்கை  கடத்த முயன்ற குற்றத்தின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினர் வழக்குத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.