Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 13, 2018

தங்கைகள் இருந்தால் தவறுகள் இல்லை..........!!! காரை சசி

Currently online
தங்கையை கொண்ட 
தமையன்கள் எவரும்
வருந்திட மாட்டார்கள் - பெரும்
தவறுகள் செய்யும் 
கயவரை போலே
திரிந்திட மாட்டார்கள்

அடுத்தவர் பெண்ணை 
இழிவென கருதி
அலைந்திட மாட்டார்கள் - தம் 
நிலையினில் இருந்தும் 
மரணிக்கும் வரையும்
இறங்கிட மாட்டார்கள்

பொய்மையை உரைத்து
பொழுதுகள் கழித்து 
புது சுகம் தேடார்கள் - சில 
பொறுக்கிகள் போலே 
போதையை ஏற்றி 
தனிமையில் கூடார்கள்

கட்டுடல் பார்த்துக் 

காதலை சொல்லி 

கற்பினை கெடுக்கார்கள் - தம்
கதைகளின் மூலம் 
மனங்களை மாற்றி
காமத்தை கொடுக்கார்கள்

பெண்மையை மதித்து
பெருமையாய் இந்த
உலகினை ஆண்டிடுவர் - சிறு 
பிழையினை செய்தால்
பிறப்பினை முடித்து 
மண்ணிலே மாண்டிடுவர்

இப்படி குணங்களை
கொண்டவரெல்லாம் 
பெண்மையை மதிப்பவர்கள் 
இறைவனை விடவும் இருமடங்காக 
தாயினை துதிப்பவர்கள் .....

          நன்றி 
ஆக்கம் : காரை சசி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.