Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 13, 2018

வவுனியாவில் விபத்து ; பாதசாரிக்கடவையை கடக்க முற்பட்டவர் படுகாயம் !!

Currently online
இன்று காலை வவுனியா கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரிக்கடவையில் சென்று கொண்டிருந்தவரை முச்சக்கரவண்டி ஒன்று மோதியுள்ளது.

குறித்த விபத்தில் பாதசாரிக்கடவையை கடக்க முற்பட்டவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தெய்வாதீனமாக எவ்வித காயங்களும் இல்லாமல் தப்பியுள்ளனர்.

வவுனியா நகரை நோக்கில் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கார்கில் பூட்சிட்டிக்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையைக் கடக்க முற்பட்ட நபரை மோதியுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.