Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 29, 2018

புன்னை நிராவியில் குளத்தில் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

Currently online
புன்னை நிராவி பகுதியில் உள்ள சிறு குளம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த சுபாஸ்(31) என  தர்மபுரம் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 23ம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த இளைஞனே நேற்று (சனிக்கிழமை)                    பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலத்தை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் தர்மபுரம் பொலிசார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிசார் இணைந்து மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.